உத்திராகண்ட் சில்க்யாரா பகுதியில் இருக்கும் சுரங்கப்பாதையில் தொழிளாளர்கள் 41 பேரை மீட்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் மீட்கப்படும் தொழிளாளர்களை உடனடியாக மருத்துவமனைக் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஆம்புலன்ஸை சுரங்கப்பாதை குழாய்களின் வழியே தொழிளாளர்கள் இருப்பிடம் வரை கொண்டு செல்ல முயற்சி செய்து வருவதாகவும், செய்தியாளர் தெரிவித்துள்ளார்.