tunnal image
tunnal image pt desk
இந்தியா

உத்தராகண்ட்: “இன்னும் 24 மணி நேரத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு” - அதிகாரிகள் தகவல்

webteam

உத்தராகண்ட்டின் உத்தரகாசியில் சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் உள்ளே 10 நாட்களாக சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் நேற்றிரவு வெஜிடபிள் புலாவ், பட்டர் பன்னீர் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன.

உத்தராகண்ட்

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் நலமுடன் உள்ளதாக வீடியோ வெளியான நிலையில், அவர்களுக்கு 6 அங்குல குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவு மற்றும் தகவல் தொடர்புக்கு வாக்கிடாக்கி, அதற்கான பவர் பேங்க் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

சிறிய குழாய் மூலம் ஆக்சிஜன் தொடர்ந்து சுரங்கத்திற்குள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு தொழிலாளர்களுக்கு வெஜிடபிள் புலாவ் மற்றும் பட்டர் பன்னீர் ஆகியவை சுடச்சுட தயாரித்து பேக்கிங் செய்து குழாய் வழியே அனுப்பப்பட்டது. முன்னதாக துண்டுகளாக்கப்பட்ட பழங்கள், குளுக்கோஸ் பானம் போன்றவையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, மீண்டும் தொழிலாளர்களுடன் எண்டோஸ்கோபி கேமரா மூலம் அதிகாரிகள் பேசினர். தொழிலாளர்களின் உறவினர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்ட பேச்சையும் அதிகாரிகள் தொழிலாளர்களை கேட்கச் செய்தனர். அடுத்த 24 மணி நேரத்தில் தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.