உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்தர் சிங் ராத், கடந்த 10 மாதங்களில் மட்டும் விருந்தினர்களின் டீ மற்றும் தின்பண்டங்களுக்காக ரூபாய் 68 லட்சம் செலவு செய்துள்ளார்.
உத்தராகண்ட்டில் முதலமைச்சர் திரிவேந்தர் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் விருந்தினர்களின் தின்பண்டம் மற்றும் டீ செலவுக்காக ரூபாய் 68 லட்சத்தை திரிவேந்ர் சிங் ராவத் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் அருகாமை மாநிலமான உத்தரப்பிரசேத்திலும், சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்திய கடந்த 2016-ம் ஆண்டு அமைச்சர்களின் டீ மற்றும் தின்பண்ட செலவுக்காக ரூபாய் 9 கோடி வரை செலவு செய்யப்பட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.