இந்தியா

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்!

ஜா. ஜாக்சன் சிங்

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கூடியது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு இன்று தாக்கல் செய்யவுள்ளது. மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டானது வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமையும் என்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.