ஏமாற்றுதல்
ஏமாற்றுதல் PT
இந்தியா

உ.பி: ஓய்வூதிய பணத்திற்காக பெற்ற தந்தைக்கே மனைவி என்று கூறி ஏமாற்றி வந்த பெண்! சிக்கியது இப்படிதான்?

Jayashree A

பணத்திற்காக இறந்த தனது தந்தையை தன் கணவன் என்று கூறி கடந்த பத்து ஆண்டுகளாக பெண் ஒருவர் அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெற்று வந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

உத்திரபிரதேச மாவட்டத்தில் ஆக்ரா மாநிலத்தில் உள்ள எட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயதுடைய மொஹ்சினா பர்வேஸ். இவர், 2017ல் ஃபரூக் அலியை ல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சிலவருடங்களில் கணவன் மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பிரிந்தனர்.

இதில் கணவன் ஃபரூக் அலி, மனைவி மொஹ்சினாவின் மேல் உள்ள வெறுப்பால், அவர் செய்துவந்த ஏமாற்று வேலை குறித்து அலிகஞ்சி போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். ஃபரூக் அலியின் புகாரில் அதிர்சியடைந்த சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட், மொஹ்சினா பர்வேஸை வரவழைத்து விசாரித்தனர். இதில் மொஹ்சினாவின் செய்து வந்த ஏமாற்று வேலையானது வெளிச்சத்திற்கு வந்தது.

மொஹ்சினா பர்வேஸின் தாய் சபியா பேகம், தந்தை வஜாஹத் உல்லா கான். தந்தை வஜாஹத் உல்லா, வருவாய் துறையில் எழுத்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் உயிருடன் இருந்த பொழுதே அவரது மனைவி சபியா பேகம் இறந்திருக்கிறார். பிறகு தனது கிடைத்த ஓய்வூதிய தொகையில் தனது மகள் மொஹ்சினா பர்வேஸுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், 2013 ஜனவரி மாதத்தில் வஜாஹத் உல்லாவும் இறந்து விடவும், தந்தையின் ஓய்வூதிய தொகை நின்றுவிடும் என்று நினைத்த மொஹ்சினா பர்வேஸ், ஒரு திட்டத்தை தீட்டியிருக்கிறார். அதன்படி, அரசாங்கத்திடமிருந்து தந்தையின் ஓய்வூதியத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொள்ள நினைத்த மொஹ்சினா, தன்னை சபியா பேகம் என்றும் தான் வஜாஹத் உல்லாவின் மனைவி என்றும் அரசாங்க அலுவலர்களிடம் பொய் கூறி இருக்கிறார். அத்துடன், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள நினைத்து, தனது தாயின் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை ஒட்டி தான்தான் சபியா பேகம் , வஜாஹத் உல்லாவின் மனைவி என்று போலி ஆவணங்களை தயார் செய்து அரசு அதிகாரிகளை ஏமாற்றி உள்ளார்.

இதன்படி கடந்த 10 ஆண்டுகளாக தனது தாயாரின் பெயரில் மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெற்று வந்த நிலையில், அவரது கணவன் ஃபரூக் அலி அளித்த புகாரினால் மொஹ்சினா பர்வேஸ் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மொஹ்சினா பர்வேஸ் மீது, ஏமாற்றுதல், மோசடி, உண்மையை மறைத்தல், அரசாங்க அதிகாரியை ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அலோக் குமார் கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்டவரின் ஓய்வூதிய விண்ணப்பத்தை சரிபார்த்த செயல் பாட்டில் குற்றம் இருப்பதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.