ஹவுராவில் இருந்து மத்திய பிரதேசம் சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து ஜபல்பூர் வழியாக ஷக்திகுஞ்ச் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப் பிரதேசத்தின் சான்பத்ரா என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் விபத்தில் உயிரிழப்பு, காயம் பற்றிய தகவல் வரவில்லை என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 2 ரயில்கள் தடம்புரண்டு பலர் பலியானதற்கு பொறுப்பேற்று அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே துறையில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.