இந்தியா

ரூ.10 க்கு புடவை, டி.ஷர்ட்...!

ரூ.10 க்கு புடவை, டி.ஷர்ட்...!

webteam

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 ரூபாய்க்கு புடவை, டி.ஷர்ட் உள்ளிட்ட துணிமணிகள், மற்றும் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் கிடைக்கும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் முயற்சியால், ஏழை எளிய மக்களுக்காக இந்தக் கடை நிறுவப்பட்டுள்ளது. இங்கு வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிளாஸ்டிக் பொருட்கள், புடவை, டி.ஷர்ட் போன்ற துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை 10 ரூபாய்க்கே வாங்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இந்தக் கடை திறந்திருக்கும். ஒருமுறை கடைக்கு வந்து பொருள் வாங்குபவர் அடுத்த 30 நாட்களுக்கு மீண்டு‌ம் வர அனுமதி கிடையாது. ஏழை மக்‌களுக்கு உதவி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தக் கடைக்கு பலரும் பொருட்களை தானமாகவும் வழங்கி வருகின்றனர்.