இந்தியா

ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கு மாநில மொழியில் விளக்குங்கள்: பிரதமர் வலியுறுத்தல்

ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கு மாநில மொழியில் விளக்குங்கள்: பிரதமர் வலியுறுத்தல்

Rasus

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்கள், ஆர்வலர்களுக்கு அவர்களது மாநில மொழியில் தெரிவிக்க விஞ்ஞானிகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அறிவியலாளர் எஸ்.என்.போஸின் 125-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலம் புதிய இந்தியாவை கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டு்ம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் பொருட்டு நமது விஞ்ஞானிகள் புதிய ஆக்கப்பூர்வமான தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளை தந்த வண்ணம் உள்ளதாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்கள், ஆர்வலர்களுக்கு அவர்களது மாநில மொழியில் தெரிவிக்க விஞ்ஞானிகள் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.