விமானங்களில் அலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்த டெலிகாம் கமிஷன் அனுமதிவழங்கியுள்ளது.
இதுவரை விமானங்கள் பறக்கும் போது அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்டர்நெட் சேவைகளை விமானங்கள் பறக்கும்போது உபயோகப்படுத்தவும் இது வரை அனுமதி இல்லை. டெலிகாம் கமிஷன் முடிவை தொடர்ந்து விமான பயணத்தின்போது அலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்த விதிமுறைகள் உருவாக்கப்படும்.இந்த விதிமுறைகளின் அடிப்படையில் டெலிகாம் நிறுவனங்கள் விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து அலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகளை பயணிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆரம்பத்தில் இந்தச் சேவை இந்தியாவுக்குள் பயணம் செய்யும்போது உபயோகப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச சேவைகளில் இந்திய வான்வெளியில் விமானம் பறக்கும் போது சேவையை பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பிற நாடுகள் அனுமதிப்பதை பொருத்து, பின்னர் இந்தச் சேவைகளை பிறநாட்டு வான்வெளியில் விமானம் பறக்கும் போதும் பயன்படுத்தலாம். இப்போதைய விதிகளின்படி, விமானம் புறப்படும் முன்னர் பயணிகள் அலைபேசியை அனைத்துவிடவேண்டும். விமானம் தரையிறங்கிய பின்னரே, அலைபேசியை உபயோகிக்கலாம்.