அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி pt web
இந்தியா

இந்திய பொருட்களுக்கு 25% கூடுதல் வரி.. அமெரிக்காவில் நாளை முதல் அமல்.. கடும் சரிவில் பங்குச்சந்தைகள்

இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த 25 விழுக்காடு கூடுதல் வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.

PT WEB

இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த 25 விழுக்காடு கூடுதல் வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 27ஆம்தேதி முதல் கூடுதலாக 25% வரிவிதிக்கப்படும் என அமெரிக்காஅதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாதுஎன அமெரிக்கா நெருக்கடி தந்து வரும்நிலையில் அதை ஏற்க இந்தியாமறுத்துவருகிறது. இதைத்தொடர்ந்து 25% கூடுதல் வரிஇந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும்என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த அறிவிப்பு ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக இந்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இது போன்ற வரி நெருக்கடிகளுக்கு அடி பணியாமல் அதை எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா அதிகரித்துக்கொள்ளும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பல நாடுகள் பொருளாதார சுயநலத்துடன் செயல்படுவதாகவும் அதிலிருந்து இந்திய மக்களை தங்கள் அரசு காப்பாற்றும் என்றும் பிரதமர் கூறினார். அமெரிக்கா ஏற்கெனவே 25% வரிவிதித்துள்ள நிலையில் தற்போது கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பொருட்களுக்கு 50% வரிவிதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.