இந்தியா

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் ரூ 21.5 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்: ட்ரம்ப் பேச்சு

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் ரூ 21.5 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்: ட்ரம்ப் பேச்சு

rajakannan

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் 21.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நாளை அமெரிக்கா ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது பயணத்தின் முதற்கட்டமாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியுடன் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசியவை:

உங்களது சிறந்த பிரதமர் நரேந்திர மோடியை 5 மாதங்களுக்கு முன் டெக்சாஸில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் அமெரிக்கா வரவேற்றது. தற்போது, அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா எங்களை வரவேற்றுள்ளது. இந்த சிறப்பான வரவேற்பை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம்.

எங்களது இதயத்தில் இந்தியாவிற்கு சிறப்பான இடம் உள்ளது. சிறப்பான வரவேற்பு அளித்த எனது நண்பர் மோடிக்கு நன்றி கூறுகிறேன்

கடந்த 70 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 7 கோடி வீடுகளில் எரிவாயு பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர்(2,15,46,76,50,000) அளவுக்கு நாளை அமெரிக்கா ஒப்பந்தம் செய்கிறது. இஸ்லாமிய பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கியுள்ளது

இந்தியாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி இரவு பகலாக உழைக்கிறார். இந்தியர்களின் ஒற்றுமை உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது” என ட்ரம்ப் பேசினார்.