இந்தியா

முன்னிலையில் ஜோ பைடன்.. நியூயார்க் மாகாணத்தில் வெற்றி .!

முன்னிலையில் ஜோ பைடன்.. நியூயார்க் மாகாணத்தில் வெற்றி .!

webteam

நியூயார்க் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். இந்திய நேரப்படி காலை 7.40மணி நிலவரப்படி, ஜோ பைடன் 129 வாக்குகளும், ட்ரம்ப் 94 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளனர்.

இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும், வெர்மாண்ட், மாசசூசட்ஸ், நியூஜெர்சி,கனக்டிகட்,டெலவர் மாநிலங்களிலும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்