இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க போராடுவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மேட்டிஸ், பயங்கரவாதத்தால் இரு நாடுகளுமே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அத்தகைய பயங்கரவாதத்தை இந்தியாவுடன் இணைந்து எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இதன்பின் பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுடன் புதிய பாதுகாப்பு தளவாடங்களையும் உருவாக்கும் என்றார். பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பது குறித்தும் தானியங்கி விமானங்களை வாங்குவது குறித்தும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிகிறது.