இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரியவந்துள்ளது. 2020-21 இல் 51.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2021-22ல் 76.11 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிகள் 2020-21 இல் $29 பில்லியனாக இருந்த நிலையில் $43.31 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-21 இல் 80.51 பில்லியன் டாலராக இருந்த இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 2021-22 ஆம் ஆண்டில் 119.42 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான ஏற்றுமதி 2020-21ல் 21.18 பில்லியன் டாலரிலிருந்து 21.25 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி 2020-21ல் 65.21 பில்லியன் டாலரிலிருந்து 94.16 பில்லியன் டாலராக உயர்ந்தது. முந்தைய நிதியாண்டில் 44 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக இடைவெளி 2021-22ல் 72.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக் சீனாவுடனான இந்தியாவின் இருவழி வர்த்தகம் 2020-21 இல் 86.4 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், 2021-22 ஆம் ஆண்டில், 115.42 பில்லியன் டாலராக இருந்தது என்று தரவு காட்டுகிறது. ஆனால் சீனாவுடன் ஒப்பிடுகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாக அமெரிக்கா வர்த்தகம் செய்துள்ளது.