பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற குழுவிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ஜுன் 8ம் தேதி விளக்கமளிக்கிறார்.
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் உயர்மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, நாடாளுமன்ற குழு எழுப்பிய கேள்விகளுக்கு ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விளக்கமளித்திருந்தார். இரண்டாவது முறையாக வரும் 25ம் தேதி உர்ஜித் படேல் மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் 25ம் தேதி அவரால் வரமுடியாத காரணத்தால் ஜுன் 8ம் தேதி விளக்கமளிக்கும் படி நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.