இந்தியா

உரி பகுதியில் என்கவுன்டர்: தீவிரவாதி பலி

உரி பகுதியில் என்கவுன்டர்: தீவிரவாதி பலி

rajakannan

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் உள்ள கல்கையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் என்று பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கருதப்படும் இடத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலை சுற்றிவளைத்தனர். பின்னர், தேடுதல் பணியின் போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கல்கையில் மூன்று முதல் நான்கு தீவிரவாதிகள் பதுங்கி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை தீவிரவாதிகள் நடத்திய கையெறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 17 பேர் காயம் அடைந்தனர்.