இந்தியா

எங்களுக்கு கூட்டணி பிடிக்கவில்லை - பாஜகவில் இணைந்த 400 சிவசேனா தொண்டர்கள்!

எங்களுக்கு கூட்டணி பிடிக்கவில்லை - பாஜகவில் இணைந்த 400 சிவசேனா தொண்டர்கள்!

webteam

தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்தது  பிடிக்கவில்லை எனக்கூறி 400 சிவசேனா தொண்டர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிரா ‘விகாஸ் அகாதி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். இந்நிலையில் சிவசேனாவைச் சேர்ந்த 400 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்தது தங்களுக்கு பிடிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பையின் தாராவி பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் சிவசேனாவைச் சேர்ந்த 400 தொண்டர்களும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய தொண்டர் ஒருவர், நான் சிவசேனா கட்சிக்காக கடந்த 10 வருடங்களாக உழைத்து வருகிறேன். நான் இந்துத்துவாவுக்கு ஆதரவு தெரிவித்தே அந்தக் கட்சியில் பணியாற்றினேன். 

சிவசேனா கட்சி மூலம் மக்களுக்கு பணியாற்ற நினைத்தேன். ஆனால் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துவிட்டது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தற்போது நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம் என தெரிவித்தார்.