இந்தியா

யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம்‌

யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம்‌

jagadeesh

கொரோனா மற்றும் பருவமழை பாதிப்புகளை காரணம் காட்டி‌ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வு, யுபிஎஸ்சி தேர்வை இம்முறை எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கலாம் ‌என அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளது. முன்னதாக தேர்வெழுதுபவர்கள் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யுபிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 14ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் அதை 6 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுகின்றனர். முன்னதாக நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது