யு.பி.எஸ்.சி. தேர்வு
யு.பி.எஸ்.சி. தேர்வு முகநூல்
இந்தியா

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு.... ஏன்? எப்போது நடக்கும்?

PT WEB

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. நடப்பாண்டில் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு மே 26ஆம் தேதி நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்நிலை தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடத்தப்படும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.