Model image Google Gemeni
இந்தியா

ரூ.2000க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்.. ஒத்திவைத்த மத்திய அரசு!

அதேசமயம், தனிநபர்களின் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியிருந்தது.

Prakash J

யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமல்படுத்தப்படும் என தேசிய பணப்பட்டுவாடா ஆணையம் அறிவித்துள்ளது.

யுபிஐ பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, அக்டோபர் 15 முதல் ரூ.2000க்கு மேல் உள்ள வணிகர்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணத்தை வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதேசமயம், தனிநபர்களின் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியிருந்தது.

UPI பரிவர்த்தனை

இந்த நிலையில்தான், யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமல்படுத்தப்படும் என தேசிய பணப்பட்டுவாடா ஆணையம் அறிவித்துள்ளது. அந்த ஆணையத்தின்கீழ் இயங்கும் யூபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ’ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகள் மீது அக்டோபர் 15 முதல் அமல்படுத்தப்படவிருந்த 0.4 சதவீத வணிகத் தள்ளுபடி விகித கட்டண முறையை தேசியப் பணப்பரிமாற்றக் கழகம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. பண்டிகை கால சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அமலாக்கத் தேதி தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.