இந்தியா

நாற்காலிகள் மீது ஏறிச்சென்ற டீச்சர்... தண்ணீரில் நிற்கும் மாணவர்கள் - வைரல் வீடியோ

Sinekadhara

உத்தரப் பிரதேசத்தில் மழைநீரில் நனையாமல் செல்ல மாணவர்களை தண்ணீரில் நிற்கவைத்து நாற்காலிகள்மீது ஏறிச்சென்ற ஆசிரியையின் வீடியோ வைரலானதை அடுத்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் மதுரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி ஆசிரியையின் செயல் இணையத்தில் பரவி வைரலானது. அதில் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் நிற்பதால் ஆசிரியை ஒருவர் மாணவர்களை வரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகளை போடச்சொல்லி அதன்மீது ஏறி நடந்துசெல்கிறார். ஆசிரியை உலர்ந்த பகுதிக்குச் செல்வதற்கு ஏதுவாக மாணவர்கள் தண்ணீரில் நின்றபடி நாற்காலிகளை தாங்கி பிடிக்கின்றனர்.

நன்றி NDTV: https://youtube.com/shorts/GhAoieiuQ50?feature=share

இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானதை அடுத்து சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனையடுத்து உத்தரப் பிரதேச ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.