இந்தியா

பீட்சாவை விட வேகமாக வருவோம்: உ.பி.போலீஸ்

பீட்சாவை விட வேகமாக வருவோம்: உ.பி.போலீஸ்

webteam

ஹோலி பண்டிகை தொடர்பான உத்தரபிரதேச காவல்துறையின் டிவிட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்கள பயன்பாட்டாளர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச காவல்துறை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஹோலி பண்டிகைக்கான வாழ்த்தினை தெரிவித்துள்ளது. ஹோலி விளையாட்டில் ஆண்களால் பிரச்னை ஏற்பட்டால் பெண்கள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும்‌, பீட்சாவை விட வேகமாக நாங்கள் வருவோம் எனவும் காவல்துறையினர் டிவிட்டரில் பதிவிட்டனர். உத்தரபிரதேச காவல்துறையின் இந்த பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.