இந்தியா

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட வீடியோ விவகாரம் - ட்விட்டருக்கு உ.பி. காவல்துறை நோட்டீஸ்

jagadeesh

சமூகத்தில் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்ததாகக் கூறி, டிவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரபிரதேச காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

காஸியாபாத்தில், இஸ்லாமிய முதியவர் ஒருவரை ஒரு கும்பல் ஜெய் ஸ்ரீராம் என கூறுமாறு செய்து, அடித்து உதைத்ததாகவும், அவரது தாடியை மழித்து சித்ரவதை செய்ததாகவும், ஒரு வீடியோவை டிவிட்டர் தளத்தில் பலர் பதிவிட்டனர். எனினும் முன்விரோதம் காரணமாகவே முதியவர் தாக்கப்பட்டதாக உத்தரபிரதேச காவல்துறை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் தகவல்களை நீக்காததால், டிவிட்டர் இந்தியாவின் தலைமை அதிகாரி மனீஷ் மகேஸ்வரிக்கு உத்தரபிரதேச காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 7 நாட்களுக்குள், லோனி காவல்நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை டிவிட்டர் நிர்வாகம் ஏற்காத நிலையில், அதற்கு வழங்கப்பட்ட சட்டப்பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.