உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியை போலீசார் கைதுசெய்தனர்.
போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தை சந்திக்க பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். ஆக்ரா சென்றபோது கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்தி பிரியங்கா காந்தியை உத்திரபிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர். பிரியங்கா காந்தி அனுமதி பெறாததால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. மேலும் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் உள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டியபின் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்குமுன்பே பிரியங்கா காந்தி உத்தரபிரதேச போலீசார் தடுத்த நிறுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த மாதத்தில் மட்டும் உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lucknow | Four people have been allowed to visit Agra now...we are going there to meet the family: Congress leader Priyanka Gandhi Vadra

She is on her way to Agra to meet family of sanitation worker who died in police custody pic.twitter.com/3fexQBeaVY
— ANI UP (@ANINewsUP) October 20, 2021