இந்தியா

ஜிஎஸ்டிக்கு விளக்கம் கொடுக்க திணறிய அமைச்சர்

ஜிஎஸ்டிக்கு விளக்கம் கொடுக்க திணறிய அமைச்சர்

webteam

உத்தரப்பிரதேச சமூக நலத்துறை அமைச்சர்  ராமாபதி சாஸ்திரி, ஜிஎஸ்டிக்கு விளக்கம் கொடுக்க திணறிய சம்பவம் நடந்துள்ளது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் கிட்டும் பலன்கள் குறித்து மத்தியப்பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள சிறுவணிகர்களுக்கு சாஸ்திரி விளக்கினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஜிஎஸ்டிக்கு என்ற சொல்லுக்கான பொருள் என்ன என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்குப் பதிலளிக்க அவர் திணறினார். அமைச்சருக்கு பின்னால் இருந்தவர்கள் ஜிஎஸ்டி குறித்து அவருக்கு எடுத்துரைத்தும், அதை சரியாக அமைச்சரால் உச்சரிக்க முடியவில்லை. சூழலை உணர்ந்த அமைச்சர், ஜிஎஸ்டிக்கான முழுவிளக்கம் தமக்கு தெரியும் என்றும், அதுகுறித்த கோப்புகளைப் படித்த பின்னர் விளக்கமளிப்பதாகவும் கூறி சமாளித்தார். சரக்கு மற்றும் சேவை வரி என்பதன் சுருக்கமே ஜிஎஸ்டி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க அமைச்சரவை சகாக்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு பொருப்பாளரை யோகி நியமித்துள்ளார். மகராஜ்கஞ்ச் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சாஸ்திரிக்கு ஜிஎஸ்டிக்கு முழுவிளக்கம் தெரியாத சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.