உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்ச்சால் வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆக்ராவின் மண்டோலா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஜமா மசூதி வளாகத்தில் உள்ள தொட்டி ஒன்றின் அருகே மர்மமான பொருள் ஒன்று கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அதில் உள்ள மர்மப்பொருள் என்னவென்று பார்த்துள்ளனர்.
இவர்களுக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததை அது இறைச்சி துண்டுகள் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இது குறித்து ஆக்ரா துணை ஆணையர் தெரிவிக்கையில்,
"வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய மசூதியில் சில ஆட்சேபனைக்குரிய பொருட்களைக் கண்டதாக தகவல் கிடைத்தது. உதவி காவல் ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதிலிருப்பது இறைச்சி துண்டு என்பது தெரியவந்தது . கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியிலிருந்த இறைச்சிக்கடையில் இறைச்சி வாங்கியது தெரியவந்தது. கடைக்காரர் நடத்திய விசாரணையில் அதை செய்தது நஸ்ரூதீன் என்பவர் என தெரியவந்தது. " என்றார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை எதிர்த்து அங்கிருந்தவர்கள் போராட்டத்தை தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளநிலையில் வன்முறையை தூண்டும் நோக்கில் அந்த நபர் இதனை செய்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.