இந்தியா

உ.பி. இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்; ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

உ.பி. இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்; ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

kaleelrahman

உத்தரபிரதேசம் காஸியாபாத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டதாக, ட்விட்டர் நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஸியாபாத் பகுதியில் உள்ள லோனி பகுதியைச் சேர்ந்த முதியவர் அப்துல் சமதை, அப்பகுதியை சேர்ந்த சிலர் அடித்ததோடு, அவரது தாடியையும் கத்தரித்தனர். முதியவரை ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுமாறு தாக்குதல் நடத்தியதாக ட்விட்டரில் தகவல் பகிரப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள காஸியாபாத் காவல்துறை, முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேநேரத்தில், மதரீதியில் தவறான தகவல்களை பதிவிட்ட 7 பேர் மீதும், ட்விட்டர் நிர்வாகம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.