இந்தியா

வாட்ஸ் ஆப்-பே கதி என்று இருப்பதா? திருமணத்தை நிறுத்தினார் மணமகன்

வாட்ஸ் ஆப்-பே கதி என்று இருப்பதா? திருமணத்தை நிறுத்தினார் மணமகன்

webteam

எப்போதும் வாட்ஸ் ஆப்-தான் கதி என்று இருந்த மணமகளால் திருமணத்தை நிறுத்தினர், மணமகன் குடும்பத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நவ்கோயன் சதன் கிராமத்தை சேர்ந்தவர் உரோஜ் மெகந்தி. இவரது மகளுக்கும் பகீர்புரா என்ற ஊரில் உள்ள கமர் ஹைதர் என்பவரது மகனுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அன்று, மணமகள் வீட்டில் திருமணத்துக்காக எல்லோரும் தயார் நிலையில் இருந்தனர். முகூர்த்த நேரம் நெருங் கிக் கொண்டிருந்தது.

மணமகன் வீட்டில் இருந்து ஒருவர் கூட வரவில்லை. இதனால் பதட்டமடைந்த பெண் வீட்டார் ஃபோன் செய்தனர். அப்போது, ’திருமணத்தை நிறுத்தறோம். உங்க பொண்ணு எப்ப பார்த்தாலும் வாட்ஸ் ஆப்-லயே இருக்கிறாங்க. இப்ப கூட எங்களுக்கு வாட்ஸ் ஆப்ல மெசேஜ் அனுப்பி இருக்காங்க. இது, எங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல’ என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதில், வரதட்சணை அதிகமாகக் கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளனர். 

இதுபற்றி மெகந்தி கூறும்போது, ‘திருமணத்துக்காக உறவினர்கள் கூடியிருந்தோம். மணமகள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. நான் போன் செய்து கேட்டேன். அப்போதுதான் திருமணத்தை நிறுத்திவிட்டதாகக் கூறினர். இது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது’ என்றார்.

அம்ரோஹா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறும்போது, ‘மணமகள் வாட்ஸ் ஆப் -பை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண் டவர். திருமணத்துக்கு முன்பு கூட மாமனார்- மாமியாருக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். எப்போதும் வாட்ஸ் ஆப்-பில் இருப்பது பிடிக்காமல் தான் திருமணத்தை நிறுத்திவிட்டனர்’ என்றார்.