உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் சேவை அனைவரும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அஜய் சவுத்ரி. மருத்துவராக சேவையாற்றி வருகிறார். இவரின் மருத்துவமனைக்குள் நுழையும் போதே அங்கு அனைவரின் கண்பார்வையிலும் படும்போடி அறிவிப்பு பலகை ஒன்று உள்ளது. அதில் ‘இங்கு பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்திற்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்’ என்று எழுதப்பட்டுள்ளது.
பொதுவாக மருத்துவர்கள் அதிக கட்டணங்களை வசூல் செய்யும் இக்காலத்தில், அவர் பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்திற்கு இலவசமாகவே சிகிச்சையளித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, “ நாட்டிற்காக தன்னலம் பார்க்காமல் பாதுகாப்பு வீரர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அவர்கள் நமக்கு செய்யும் உதவிக்கு கைமாறாக இந்த சேவையை அவர்களின் குடும்பத்திற்கு அளித்து வருகிறேன்” என்றார். அஜய் சவுத்ரியின் இந்த மருத்துவ சேவை அனைவரும் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.