இந்தியா

உ.பி குழந்தைகள் உயிரிழப்பு 50ஆக உயர்வு!

உ.பி குழந்தைகள் உயிரிழப்பு 50ஆக உயர்வு!

webteam

உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபரூகாபாத் அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகியிருந்த நிலையில், மேலும் ஒரு குழந்தை பலியான சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் 50 குழந்தைகளில் 19 பேர் பிரசவத்தின் போதே மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

சமீபத்தில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 63 மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோன்று ஃபரூக்காபாத் மருத்துவமனையிலும் குழந்தைகள் பலியானதற்கு காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தான் என வெளியாகியுள்ள தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு ஃபரூகாபாத் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.