கொரோனா வைரஸ் தொற்று பின்னணியால் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதர பின்னடைவை சந்திக்கக்கூடும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி கவலை தெரிவித்துள்ளார்.
”நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மிகக்குறைந்த அளவை எட்டக்கூடும். பொருளாதாரத்தை மீட்டுகொண்டு வருவதோடு நோய்க்கிருமிகளுடன் வாழ மக்கள் தயாராக இருக்கவேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தபட்சம் 5 சதவீதம் சுருங்கும். சுதந்திற்கு பின்னர் 1947 ஆம் ஆண்டிலிருந்து மிகக்குறைந்த உள்நாட்டு உற்பத்தியை அடையக்கூடிய அபாயம் ஏற்படலாம்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அவர் ’உலகளாவிய மொத்த உற்பத்தி குறைந்துவிட்டது. உலகளாவிய வர்த்தகம் சுருங்கிவிட்டது. உலகளாவிய பயணம் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. உலகளாவிய மொத்த உற்பத்தியும் 5 சதவீதத்திற்கும் 10 சதவீதத்திற்கும் இடையே சுருங்கக்கூடும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 6 மாதங்கலிருந்து 9 மாதங்களுக்குள் கிடைக்கும். ஒருநாளைக்கு 10 மில்லியன் தடுப்பூசி மக்களுக்கு போட முடிந்தாலும் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி போட 140 நாட்கள் ஆகும். தோய் பரவாமல் தடுக்கவே நீண்டகாலம் எடுக்கும்” என்றும் கூறியுள்ளார். அவரின் கருத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.