இந்தியா

"ஹைதராபாத் என்கவுன்ட்டர் போல் உன்னாவ் சம்பவத்திலும் தேவை"- கொதிக்கும் தந்தை..!

"ஹைதராபாத் என்கவுன்ட்டர் போல் உன்னாவ் சம்பவத்திலும் தேவை"- கொதிக்கும் தந்தை..!

jagadeesh

ஹைதராபாத் என்கவுன்ட்டரைப் போன்றே, தனது மகளைக் கொன்றவர்களும் கொல்லப்பட வேண்டும் என உன்னாவ் பெண்ணின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை,‌‌ பாலியல் வன்கொடுமை‌ செய்தவர்கள் ஜாமீனில்‌‌‌ வெளியே வந்த பின்னர் பெட்ரோல் ‌ஊற்றி தீ வைத்தனர்‌. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனக்கு பணமோ வேறு ஏதேனும் உதவியோ தேவையில்லை என உன்னாவ் பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

தனது மகளை கொன்றவர்களை, ஹைதராபாத்தில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது போல் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும் அல்லது தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என உன்னாவ் பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.