உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்த நிலையில் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே உன்னாவ் பெண்ணின் பாகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இரண்டு பெண் காவலர்கள் உள்பட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இளம்பெண் ஒருவர் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பான புகாரில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.