இந்தியா

உலகிலேயே தமிழ்தான் தொன்மையான மொழி: ராம்நாத் கோவிந்த்

உலகிலேயே தமிழ்தான் தொன்மையான மொழி: ராம்நாத் கோவிந்த்

webteam

சென்னைப் பல்கலைக்கழகம் நாட்டின் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குரியது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்‌ ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், மாணவர்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது என்றும், பட்டம் பெறும் மாணவர்கள், தங்களது படிப்பை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்மொழியின் சிறப்பு குறித்து பேசிய குடியரசுத் தலைவர், உலகிலேயே தமிழ்மொழி தான் தொன்மையான மொழி என்றார். 

அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார். மேலும்‌ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கக் கட்டிடத்தை திறந்து வைத்தார். கல்லூரியில் முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதக்கம் வழங்கி கௌரவித்தார். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.