இந்தியா

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது: மத்திய அரசு

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது: மத்திய அரசு

webteam

ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையின் கேள்வி நேரத்தில் பதிலளித்து பேசிய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகாய், ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என்றார். கடந்த 9 மாதங்களில் ரயில் பயணிகள் போக்குவரத்து சுமார் ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் பண்டிகைகள், விழாக்களின்போது பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். சுவிதா உள்ளிட்ட சிறப்பு ரயில்களில் ஏற்கனவே சிறிது கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான ரயில் போக்குவரத்துக்கான பயணக் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.