இந்தியா

மத்திய அமைச்சர் அலுவாலியா மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் அலுவாலியா மருத்துவமனையில் அனுமதி!

webteam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் அலுவாலியா உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா. மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு காய்ச்சல் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.