இந்தியா

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா..?

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா..?

Rasus

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை இணயமைச்சராக இருப்பவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த நேரத்தில் எம்.ஜே.அக்பர் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 10-க்கும் அதிகமான பெண்கள் மீ டூ மூலம் அக்பருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இதனையடுத்து பாலியல் புகாருக்குள்ளான எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. பாரதிய ஜனதா கட்சி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை எம்.ஜே.அக்பர் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.