இந்தியா

'இந்திய வகை வைரஸ் என்ற பதிவுகளை நீக்கிடுக' - சமூக வலைத் தளங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Sinekadhara

கொரோனா இரண்டாவது அலையின்போது குறிப்பிடப்படும் வைரஸ் தொற்றை இந்திய வகை என்று தெரிவிக்கும் பதிவுகளை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா வைரசை புதிய வகை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பெயரை சேர்த்து வெளியான பதிவுகளை நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய வகை வைரஸ் என்று குறிப்பிடுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயரில் உள்ள பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்குமாறும், இந்தியாவின் பெயரை இணைத்து உருமாறிய கொரோனா வைரசை குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.