அனைத்துக் கட்சிக் கூட்டம் கோப்புப்படம்
இந்தியா

பட்ஜெட் 2025: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

PT WEB

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக நாடாளுமன்றம் 31 ஆம் தேதி தொடங்குகிறது.