இந்தியா

இந்திய சிறைகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 5,150 அடைப்பு: மத்திய அரசு

இந்திய சிறைகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 5,150 அடைப்பு: மத்திய அரசு

கலிலுல்லா

வெளிநாடுகளைச் சேர்ந்த 5150 பேர் இந்தியாவில் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அரசு இந்த தகவலை கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக வங்கதேசத்தை சேர்ந்த 2513 பேரும், நைஜீரியாவை சேர்ந்த 811 பேரும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த 745 பேர், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 306 பேர், பாகிஸ்தானைச் சார்ந்த 203 பேர், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 150 பேர், இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 65 பேரும் , மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 36 பேரும், தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 30 பேரும், சீனாவைச் சேர்ந்த 19 பேரும், வட அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த 8 பேரும், மற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 232 பேரும் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.