இந்தியா

வரும் 30-ஆம் தேதிக்கு பின் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படாது - மத்திய உணவுத்துறை

வரும் 30-ஆம் தேதிக்கு பின் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படாது - மத்திய உணவுத்துறை

Sinekadhara

(கோப்பு புகைப்படம்)

நியாய விலைக்கடைகளில் மானியவிலை உணவு தானியத்துக்கு மேல் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டம் வரும் 30ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை அடுத்து, ஏழைகளின் உணவுத் தேவையை பூர்த்திசெய்ய நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் முதல் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி நியாய விலைக்கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானியவிலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் இத்திட்டம் நீட்டிக்கப்படாது என்று மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதன்ஷூ பாண்டே கூறியுள்ளார். தற்போது பொருளாதாரம் மீண்டு வருவதாலும், உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக இருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.