பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவுக்கு வரவுள்ள நிலையில் கடைசி நாட்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று எதிர்கட்சிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தச் சூழலில் நாளை காலை டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை 7 மணிக்கு பாஜகவில் பொது செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் பாஜகவின் செயல் தலைவர் நட்டா தலைமையில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே டெல்லியில் இரண்டு நாட்களாக பாஜக எம்பிக்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.