இந்தியா

நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

Sinekadhara

மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பாஸ்வன் மற்றும் சுரேஷ் அங்காடி ஆகியோர் காலமடைந்தனர். சிலர் அமைச்சரவையை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது மத்திய அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மத்திய அமைச்சரவையில் பல காலியிடங்கள் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நாளை மறுநாள் காலையில் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக பீகாரிலிருந்து சுஷில்குமார் மோடி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து அனுப்பிரியா படேல் ஆகியோர் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அசாமின் சர்பானந்த சோனாவாலுக்கும் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணியிலுள்ள அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்கிடைக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.