பட்ஜெட்டை திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி சமர்ப்பிக்கும் முடிவில் மாற்றமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அமைச்சரவை செயலகம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல்களுக்கு முன்னதாக பட்ஜெட்டை சமர்ப்பிக்க கூடாது என மத்திய அரசை அறிவுறுத்தக் கூறி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்திருந்தன. தேர்தலுக்கு முன் பட்ஜெட் சமர்ப்பித்தால் சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும் என்றும் இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக அமையும் என்றும் அவை தங்கள் மனுவில் கூறியிருந்தன. இந்நிலையில் மத்திய அரசின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.