இந்தியா

வானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம் 

வானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம் 

webteam

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் கட்சியினர் இடையே நடைபெற்ற கலவரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முதல் மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் இருந்து வருகின்றன. மேலும் மக்களவைத் தேர்தலின் போது இந்த இருக் கட்சிகளிடையே வாக்குச்சாவடிகளிலும் மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் நேற்று அசன்சால் பகுதியில் பாஜகவின் யுவ மோர்சா தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டுள்ளார். அதன்பிறகு அங்கு இருந்த பாஜக யுவ மோர்சா தொண்டர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அசன்சால் பகுதியில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கலவரம் அதிகம் நிகழும் பகுதியாக இருந்து வருகிறது. ஏனென்றால் இந்தத் தொகுதியில் பாஜகவின் மத்திய அமைச்சர் பாபூல் சுப்ரியோ இரண்டாவது முறையாக எம்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.