ஆதார் என்பது ஒருவரைப் பற்றிய தகவல் அறிவதற்கான சாதனம் அல்ல என்றும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறை மட்டுமே என்றும் பிரத்யேக அடையாள எண் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் எண் நடைமுறையால் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இவ்விளக்கம் வெளியாகியுள்ளது.
மேலும் ஆதார் தகவல்கள் வலுவான சட்டங்கள் மூலம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அடையாள எண் ஆணையத்தின் தலைமை அதிகாரி அஜய் பூஷண் தெரிவித்தார். ட்விட்டரில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அஜய் பூஷண் இவ்வாறு பதிலளித்தார்