பள்ளிகள் மூலமாகவே குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 வயதுக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 7 கோடி குழந்தைகளுக்கு ஆதார் எண் இல்லை என ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். 5 வயதிலிருந்து 7 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எண்ணை இலவசமாக பெறலாம் என்றும் 7 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் ஆதார் எண் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 7 வயதுக்குள் பதிவை செய்துகொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்யத் தவறினால், ஆதார் எண் அவர்களின் முடக்கப்படும் என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார். தற்போது பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்ளானவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் ஆதார் எண் வழங்கப்படுகிறது.
எனவே, பள்ளிகள் மூலமாகவே குழந்தைகளுக்கு ஆதார் எண் எடுப்பதற்கான பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.