இந்தியா

புதிய ஆன்லைன் படிப்புகள்.. விதிகளை எளிமைப்படுத்தியுள்ள யுஜிசி

webteam

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் புதிய ஆன்லைன் படிப்புகளைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி).

இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பை வெளியிட்டு, அதைப் பற்றி சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். உயர்கல்வி நிலையங்கள் திறந்தநிலை மற்றும் தொலைநிலை படிப்புகளைத் தொடங்குவதற்கு தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார அமைப்பு (NAAC) மற்றும் என்ஐஆர்எப் அமைப்புகளிடம் அங்கீகாரம் பெறவேண்டும்.

ஆன்லைன் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் டாப் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டியலில் ஒருமுறையாவது இடம்பெற்றிருக்கவேண்டும். நடப்புக் கல்வியாண்டுக்கு என்ஐஆர்எப் மற்றும் நேக் அமைப்பின் அங்கீகாரம் பெற்றால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி. துரைசாமி, புதிய தொலைநிலைப் படிப்புகளை தொடங்குவதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு சிரமங்களைச் சந்தித்தார். தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ள யுஜிசியின் புதிய வழிமுறைகளை அவர் வரவேற்றுள்ளார்.