இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் தனது தீபாவளி வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் பேசும்போது, ‘’சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் எளிமையாக தீபமேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார்.
பட்டாசு வெடிக்க வேண்டாம் என கோலி குறிப்பிட்டு பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடிக்கப்படும். குறிப்பாக இறுதிப் போட்டியின் முடிவில் பெரிய அளவில் பட்டாசு வெடிக்கப்படும். அதைக் குறிப்பிட்டு, ஐபிஎல் தொடரில் இவர் ஆடும் போது பட்டாசு வெடித்தார்கள். அப்போது சும்மா இருந்து விட்டு எங்களை மட்டும் ஏன் சொல்கிறார்? என கேட்டுள்ளனர்.
மேலும் இந்த மாத தொடக்கத்தில் துபாயில் தனது பிறந்தநாள் விழாவை ஆர்.சி.பி அணியினருடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய செய்தியை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான் உதித் ராஜ், விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் உதித் ராஜ் கூறுகையில், “அனுஷ்கா தனது நாய் விராட் கோலியை கவனித்துக் கொள்ள வேண்டியதில்லை. நாயை விட யாரும் உண்மையுள்ளவர்கள் அல்ல. நீங்கள் பூர்வீகமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை உறுதிசெய்ய உங்களுக்கு டி.என்.ஏ எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கோலியை உதித் ராஜ் நாய் என்று ஏன் குறிப்பிட்டு விமர்சித்தார் என்பது தெரிவராத நிலையில் அவருடைய இக்கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.