இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

webteam

மகாராஷ்டிராவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

பிற்பகலில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதனிடையே, பேரவையின் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலீப் வால்ஸே பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஆரே காலனியில் நடைபெறும் மெட்ரோ பணி நிறுத்தப்படும் என்றார். ஆரே காலனியில் மெட்ரோ ஷெட் அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாக கூறி போராட்டம் நடைபெற்றது நினைவு கூறத்தக்கது.